Welcome Scraps, Graphics and Comments
More Images & Scraps
Custom Search

மலர்கள் சிறப்பு

மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர்.



மௌவல் எனச் சங்ககாலத்தில் வழங்கப்பட்ட மலரை இக்காலத்தில் மரமல்லி (மரமல்லிகை) என வழங்குகின்றனர். இது வீட்டில் வளர்க்கப்படும் மரம். இந்த மலரின் அரும்புகள் மகளிரின் பல் வரிசைக்கு உவமையாகக் காட்டப்பட்டுள்ளன.

சங்கநூல் குறிப்புகள் ;-

௧) குறிஞ்சி நில மகளிர் குவித்து விளையாடிய மலர்களில் ஒன்று மௌவல்.

௨) குடியிருப்பு மனைகளில் இதனை நட்டு வளர்ப்பர்.
இரவில் பூக்கும் இந்த மலர் சுற்றிலும் மணக்கும்.

௩) ஊர் ஓரப் பள்ளங்களில் இது வளர்க்கப்படும்.

௪) மல்லிகை, மௌவல், சண்பகம் ஆகியவை வெவ்வேறு மலர்கள்.

௫) மகளிர் சிரிப்பது போலப் பூக்கும்.

௬) சில பெண்களின் பற்களை இக்காலத்தில் ‘அரிசிப்பல்’ எனப் பாராட்டுவர். இதனைச் சங்கப்பாடல்கள் மௌவலோடு ஒப்பிட்டுப் பாராட்டுகின்றன.

௭) நொச்சிச் செடி ஆற்றங்கரைகளில் வளரும்.

௮) இது ஆற்று நொச்சி. வீட்டில் நட்டு வளர்க்கும் மௌவலை ‘மனைநொச்சி’ எனவும் வழங்கினர்

காகிதப்பூ என்பது ஒரு வகைப் பூ



காகிதப்பூ என்பது ஒரு வகைப் பூ. இது போகைன்வில்லா (Bougainvillea) என அழைக்கப்படுகின்றது.
இது பூக்கும் தாவரவகைக்குரியது.
தென்னாபிரிக்காவில் பிரேசில் முதல் பேரு வரையான பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது.
இதில் சுமார் 18 வரையான குலபேதங்கள் இருப்பாதாக கூறப்படுகின்றது.
இந்த மலர் மிகவும் மெல்லியதாகக் காகிதத்தைப் போல் இருப்பதால், இதற்குக் காகிதப்பூ என்று தமிழில் பெயர் வழங்கப்படுகிறது.
இப்பூக்கள் முளரிப்பூ நிறம், சிவப்பு, வெள்ளை முதலிய நிறங்களில் காணப்படுகின்றன. இதன் செடியில் முட்கள் இருக்கும்.

Bougainvillea is known as "Kaakithappoo" in Tamil.

கறிவேப்பிலையை ஏன் தாளிக்கிறோம்?

கறிவேப்பிலையை எண்ணெயுடன் சேர்த்து (Lipophilic) சாப்பிடும்போது அதன் வேதிப்பொருட்கள் முழுமையாக உடலைச் சென்றடையும். கறிவேப்பிலையைத் தாளிதம் செய்யும்போது மிக லேசாக எண்ணெயில் வதக்க வேண்டும். இல்லை எனில் இதில் உள்ள பீட்டா கரோட்டின் ஆவியாகி பலன் இல்லாமல் போய்விடும். ‘கறிவேப்பிலையையும் கடுகையும் ஒன்றாகச் சேர்த்து தாளிப்பதினால் நன்மை உண்டா?’ என்பதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள கேரளா பல்கலைக்கழக மருத்துவக் குழுவினர் ஆய்வு செய்தனர். இதில் கறிவேப்பிலையும் கடுகும் இணைந்து உடலில் உள்ள திசுக்களை அழிவில் இருந்து பாதுகாப்பதாகவும் நச்சுத் தன்மையை ஏற்படுத்தும் ஃப்ரீ ராடிக்கல்ஸ் (Free radicals) உருவாவதைத் தடுப்பதாகவும் கண்டுபிடித்து உள்ளனர். உடல் எடையை அதிகரிக்க விரும்புபவர்கள் கறிவேப்பிலையும் பொட்டுக்கடலையும் சம பங்கு கலந்து, பொடியாக்கிப் பசு நெய் அல்லது நல்லெண்ணெய் சேர்த்து சாப்பிட்டுவரலாம் இனிமேலாவது, கறிவேப்பிலையைத் தூக்கித் தூர எறிந்துவிடாமல் நன்றாக மென்று சாப்பிடுங்கள்!